Pathinmoondram Pakkam: Oru Abalayin Suyasarithai
BücherAngebote / Angebote:
சந்தோஷமான வாழ்க்கை வேண்டும் என்று ஆசைப்படாதோர் இந்த பூவுலகில் இல்லை.கூடவே அந்த வாழ்கைக்கான வரையறை எதுவென்று தெரியாமல் தடுமாறுபவரும் ஏராளம்.ஜானகி - அன்பான குடும்பத்தில் பிறந்த அழகான பெண். இதமான பாடல் கேட்டு, சாரல் மழையில், சாலையோரம் நடப்பதே அவளுக்கு சந்தோஷம். கூடவே குடை பிடிக்க வேண்டிய கைகளில் ஐஸ்கிரீம் வேறு. கோடி ரூபாய் கொடுத்து சந்தோஷத்தை தேடுவோர் மத்தியில், பத்து ரூபாய் ஐஸ்கிரீமில் அதே உணர்வை பெறுபவள் தான் ஜானகி.பரமு - அனாதை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் ஒன்றும் இயந்திரத்திற்கு பிறக்கவில்லை. வேண்டுமென்றால், தனித்திருக்கிறார் இல்லை தனித்து விடப்பட்டார் என்று சொல்லலாம். வயதில் அரைசதம் அடித்த பரமுவின் சந்தோஷம் தமிழ் எழுத்துக்களில் உயிர் வாழ்கிறது.ராம்கி - சிறுவயதிலே அம்மா என்ற மாணிக்கத்தை பறிகொடுத்தவன், வாழ்க்கையில் ஒரே லட்சியத்தோடு வாழ்ந்தான். அது யாதெனில், தன் அம்மாவின் மறைவுக்கு, ஏதோ ஒரு வகையில் காரணமான, போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாவை தினமும் அவமானப்படுத்த வேண்டுமென்பதே. ராம்கிக்கு அது மட்டுமே சந்தோஷம்.இப்படி வெவ்வேறு பாதைகளில் பயணித்த மூவரையும், ஒரு நாவல் ஒன்றிணைத்த போது, நடந்த காட்சிகளே பதின்மூன்றாம் பக்கம்.
Folgt in ca. 15 Arbeitstagen